அரசு பஸ் மோதி தனியார் பள்ளி வேன் டிரைவர் பலி

வில்லுக்குறி அருகே அரசு பஸ் மோதி தனியார் பள்ளி வேன் டிரைவர் பரிதாபமாக பலியானார்.

Update: 2022-07-07 15:50 GMT

திங்கள்சந்தை:

வில்லுக்குறி அருகே அரசு பஸ் மோதி தனியார் பள்ளி வேன் டிரைவர் பரிதாபமாக பலியானார்.

தனியார் பள்ளி டிரைவர்

திருவட்டார் அருகே உள்ள வீயன்னூர் குன்றுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவருடைய மகன் அஜின் (வயது 28). இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

அஜின் தினமும் பள்ளி மாணவ-மாணவிகளை வேனில் அழைத்துச் சென்று மாலையில் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது, மாலையில் வில்லுக்குறி வரை மாணவர்களை அழைத்து வந்து இறக்கி விட்டு விட்டு வேனை அந்த பகுதியில் நிறுத்தி விடுவார். பின்னர், பஸ்சில் தனது வீட்டுக்கு செல்வது வழக்கம்.

அரசு பஸ் மோதியது

இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் மாணவர்களை அழைத்து செல்வதற்கான வேனை எடுக்க வில்லுக்குறிக்கு அரசு பஸ்சில் வந்தார். பஸ்சில் இருந்து இறங்கி வில்லுக்குறி பாலம் பஸ் நிறுத்தத்தில் நின்ற பள்ளி வேனை எடுப்பதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் அஜின் மீது மோதியது. இதில் அஜினுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அஜின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகம்

இதுகுறித்து அஜினின் உறவினர் பயஸ்மோரிஸ் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அரசு பஸ் டிரைவரான நட்டாலம் புலிவிளைவீடு பகுதிைய சேர்ந்த ரமேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

அரசு பஸ் மோதி தனியார் பள்ளி வேன் டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்