தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

Update: 2023-09-21 20:22 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் விழா நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளியில் நடைபெறவுள்ளது. முகாமில் தமிழக அளவில் பல்வேறு முன்னணி தனியார் துறைகைளச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர். மேலும் அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு மற்றும் இலவச திறன் பயிற்சிக்கான பதிவிற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிரைவர் உள்ளிட்ட 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, ஓட்டல் மேனேஜ்மென்ட், இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் படிப்பு போன்ற கல்வித்தகுதிகள் உடையவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். வேலை தேடுபவர்கள், 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே வேலை தேடுபவர்கள் சுயகுறிப்புடன் அனைத்து கல்வி சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 88072 04332 மற்றும் 04151-295422 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்