தனியார் மில் ஊழியர் பலி

எருமப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தனியார் மில் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-09-14 18:45 GMT

எருமப்பட்டி

நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டி பாரதியார் நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் மாது (வயது 38). இவர் சேலம் ரோட்டில் உள்ள தனியார் மில்லில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நந்தினி (25). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாது, தனது மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை ஊராட்சி செல்வதற்காக துறையூர் மெயின் ரோடு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அலங்காநத்தம் பிரிவு அருகே எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அந்த பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மாதுவை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற லாரி டிரைவரை தேடி வருகி்ன்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்