நெல்லையில் தனியார் ஆஸ்பத்திரி முற்றுகை

நெல்லையில் தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

Update: 2023-07-18 21:38 GMT

நெல்லை திருப்பணிகரிசல்குளம் வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). இவர் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று இறந்து விட்டார்.

ராஜேஷ் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய உறவினர்கள், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தலைவர் மாரியப்பபாண்டியன், தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கிணைப்பாளர் லெனின்கென்னடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ், வண்ணை முருகன், வேல்முருகன், மங்கள்ராஜ்பாண்டியன் ஆகியோர் தலைமையில் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் ராஜேஷ் உடலை பெற்று சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்