தனியார் ஆஸ்பத்திரி மேலாளர் கைது

பாளையங்கோட்டையில் தனியார் ஆஸ்பத்திரி மேலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-26 20:33 GMT

நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி பைபாஸ் சாலையில் சில நாட்களுக்கு முன்பு மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஆஸ்பத்திரி மேலாளர் மில்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.



Tags:    

மேலும் செய்திகள்