தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நிலுவைத் தொகையை வழங்கக்கோரி தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த அகரம்சேரி பகுதியில் இயங்கி வந்த தனியார் ஷூ தொழிற்சாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திடீரென மூடப்பட்டது. அப்போது தொழிலாளர்களுக்கு 6-மாத ஊதிய பாக்கி மற்றும் இழுப்பீடு தொகை வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 5 ஆண்டுகள் கடந்தும் தொழிலாளருக்கு ஊதிய பாக்கி மற்றும் செட்டில்மெண்ட் உள்ளிட்ட எந்தவித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். ரூ.15 கோடிக்கு மேல் உள்ள நிலுவைத் தொகை உள்ளதால் நிர்வாகம் உடனடியாக தொழிலாளருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.