தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் நகை திருட்டு
ராணிப்பேட்டையில் தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் நகை திருட்டு போனது.
ராணிப்பேட்டை மகாவீர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். தனியார் தொழிற்சாலை ஊழியர். இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, எவ்வளவு நகை திருடு போனது, திருடியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.