தனியார் நிறுவன மேலாளர் படுகாயம்

தனியார் நிறுவன மேலாளர் படுகாயம்;

Update: 2022-11-10 18:45 GMT

மஞ்சூர்

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ்(வயது 37). இவர் எமரால்டு ரெட்ஹில் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் அற்புதராஜ் சம்பவத்தன்று தனது நண்பர் தங்கமணி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

எமரால்டு அடுத்த ரெட்ஹில்ட் பகுதியில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அற்புதராஜ் படுகாயம் அடைந்தார். தங்கமணி லேசான காயத்துடன் தப்பினார். இதையடுத்து அற்புதராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எமரால்டு சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்