வாடிப்பட்டி
புதுச்சேரி திருகண்ணூர் வணிகர் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35) விளையாட்டு உபகரண பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆனந்தி (வயது 34) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சதீஷ் கடந்த 5-ந் தேதி மதுரையில் உள்ள நண்பர்களை பார்க்க செல்வதாக கூறி புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு வந்தார். அதன்பின் வாடிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து நண்பருடன் தங்கினார். 6-ந்தேதி மதியம் 12 மணியளவில் நண்பர்கள் புறப்பட்டு சென்றனர். சதீஷ் மட்டும் தனியாக இருந்தார். அன்று மாலை 6.30 மணி அளவில் நண்பர்களில் ஒருவரான கார்த்திக் என்பவர் புரோட்டா வாங்கிக் கொண்டு ஓட்டல் அறைக்கு சென்று கதவைத் தட்டி உள்ளார். கதவு திறக்காததால் ஓட்டல் ஊழியர்களிடம் தகவல் சொல்லி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சதீஷ் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.