தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 34). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. வேல்முருகன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை இல்லாததால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.