தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்
டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில், தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்தார்.
விழுப்புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). தனியார் நிறுவன ஊழியர். நேற்று இவர், மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் இருந்து டிராக்டரில் திண்டு்க்கல் மாவட்டம் நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலையில் வேம்பரளி பகுதியில் டிராக்டர் சென்றது. அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது. இதில் ரமேஷ் படுகாயமடைந்தார். மேலும் டிராக்டரின் இடதுபுற சக்கரத்தில் இருந்த டயர் கழன்றது. அக்கம்பக்கத்தினர் ரமேசை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.