தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2023-08-24 18:45 GMT

விருதுநகர்

விருதுநகர் அல்லம்பட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இவரது மனைவி முத்துலட்சுமி வேலைக்கு சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி இவரது மனைவி முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்