தனியார் பஸ்- சரக்கு ஆட்டோ மோதல்; 2 பேர் படுகாயம்

தனியார் பஸ்- சரக்கு ஆட்டோ மோதி நடந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-08-31 19:30 GMT

வடபாதிமங்கலத்தில் இருந்து கூத்தாநல்லூர் நோக்கி, மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலை சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது, காடுவெட்டி என்ற இடத்தில் ஆபத்தான வளைவில் சரக்கு ஆட்டோ சென்றபோது, எதிரே கூத்தாநல்லூரில் இருந்து, வடபாதிமங்கலம் நோக்கி சென்ற தனியார் பஸ்சும், சரக்கு ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ டிரைவர் மன்னார்குடி, மீனாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சற்குணம் (56), விற்பனையாளர் மன்னார்குடி மணவாளன் தெருவைச் சேர்ந்த அசோக்குமார் (47) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 2பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் சற்குணம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்