புதுப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதல்; 2 பேர் படுகாயம்

புதுப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2023-09-06 18:45 GMT

புதுப்பேட்டை, 

கடலூர் குணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வேலு மகன் ஏங்கில்ஸ் (வயது 24). இவர், தனது நண்பரான சேமக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (29) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்குசெட்டிப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஏங்கில்ஸ், பிரேம்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்