தனியார் வங்கி ஊழியர் தற்கொலை

உளுந்தூர்பேட்டையில் தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-06-08 17:35 GMT

உளுந்தூர்பேட்டை, \

உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 25). இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். கோபால கிருஷ்ணனின் தந்தை கணேசன் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்