மதுரவாயல் அருகே தனியார் வங்கி ஏடிஎம் எந்திரம் உடைப்பு; கொள்ளை முயற்சியா என போலீஸ் விசாரணை

மதுரவாயல் அருகே தனியார் வங்கி ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update: 2023-06-22 17:15 GMT

மதுரவாயல் அடுத்த மேட்டுக்குப்பம், திருவள்ளூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் ஏடிஎம் மையத்திற்குள் இருந்த புத்தகத்தில் கையெழுத்து இட சென்றபோது ஏடிஎம் எந்திரத்தில் ஏடிஎம் கார்டு போடும் இடம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஏடிஎம் எந்திரம் முழுமையாக உடைக்கப்படாமல் ஏடிஎம் கார்டு போடும் இடம் மட்டும் உடைக்கப்பட்டு இருந்ததால் மர்ம நபர்கள் போதையில் ஏடிஎம் கார்டை போடும்போது வெளியே வராதால் அதனை உடைத்தார்களா அல்லது ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் ஏ.டி.எம். மையத்திற்குள் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்