கோவை மத்திய சிறையில் கைதி சாவு

கோவை மத்திய சிறையில் கைதி சாவு

Update: 2022-09-14 15:14 GMT

கோவை

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் வாய்க்கால் ரோட்டை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 72). இவர் கொலை வழக்கில் கைதாகி கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார். வயது மூப்பின் காரணமாக காளியப்பன் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி காளியப்பனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் மூச்சு திணறால் அவதிப்பட்டார். இதையடுத்து சிறை அதிகாரிகள் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகளுக்கான வார்டில் சேர்த்தனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்