நகர்ப்புற சுகாதார மையத்தில் முதன்மை செயலாளர் ஆய்வு

Update: 2023-04-24 19:21 GMT

சேலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற சுகாதார மையத்தில் முதன்மை செயலாளர் ஆய்வு நடத்தினார்.

சுகாதார மையம்

சேலம் குமாரசாமிபட்டி நகர்ப்புற சமுதாய சுகாதார மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஆய்வு நடத்தினார். அப்போது சுகாதார மையத்திற்கு தினமும் வரும் நோயாளிகள் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் பணி குறித்தும், பிரசவ அறை, புறநோயாளிகள் பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை மையம், மருந்தகம், சிறப்பு மருத்துவப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், சளி பரிசோதனை கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் ஒவ்வொரு மாதமும் எத்தனை பிரசவங்கள் நடைபெறுகிறது. பிரசவ அறையில் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள், ஆய்வகத்தில் மேற்கொள்ளும் பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தார்.

மருத்துவ உபகரணங்கள்

பின்னர் மையத்திற்கு கூடுதலாக தேவைப்படும் வசதிகள், மருத்துவ உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்னர் தென் அழகாபுரம், குமரன் நகர் ஆகிய இடங்களில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடத்தை பார்வையிட்டார்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை டீன் மணி, சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் சவுண்டம்மாள், ஜெமினி, யோகானந்த்், கண்காணிப்பு பொறியாளர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்