பிரதமர் வருகை - சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை

பிரதமர் மோடி வருகை மற்றும் பல்வேறு காரணங்களையொட்டி சென்னையில் ஏப்ரல் 29ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-03-03 08:11 GMT

சென்னை,

பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். சென்னை நந்தனத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மேலும் கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு (உற்பத்தி) திட்டத்தையும் பார்வையிடுகிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி வருகை மற்றும் பல்வேறு காரணங்களையொட்டி சென்னையில் ஏப்ரல் 29ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி டிரோன்களை பறக்கவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் வருகையையொட்டி சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்