முதல்-அமைச்சர் தூங்க மாட்டார்- கவிஞர் வைரமுத்து சமூகவலைதள பதிவு
நீரோடும் சாலைகளில் காரோடும் வரைக்கும் முதல்-அமைச்சர் தூங்கமாட்டார் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் அதுகுறித்து கவிஞர் வைரமுத்து சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு அவரது துடிப்பையும் துயரத்தையும் புரிந்து கொண்ட அமைச்சர்களும், அதிகாரிகளும், களப்பணியாளர்களும் படையாக இணைந்தார்கள்; குடையாக நனைந்தார்கள்
அவர்களின் நற்றொண்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டியது மழை ஓய்ந்த பிறகும் அவர்கள் ஓய்ந்தாரில்லை. இயற்கை ஒரேநாளில் சவால் விடுகிறது. மனிதன்தான் பலநாள் போராடுகிறான். இறுதிவெற்றி மனிதனுக்குத்தான்.
திறமையோடும் தீவிரத்தோடும் அரும்பணி ஆற்றுவோரைப் பாராட்டுகிறோம். விமர்சனங்களை விடுங்கள். இது மீட்சிக்கு ஓர் ஆட்சி என்று நடுநிலையாளர் நற்சான்று தருவர். முதல்-அமைச்சர் தூங்கமாட்டார், நீரோடும் சாலைகளில் காரோடும் வரைக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.