தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்

தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-07-29 05:48 GMT

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழா இன்று சென்னை சென்னை கிண்டியில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முதலிடம். 53% பேர் உயர்கல்வி பயில்கின்றனர், அதிலும் ஆண்களை விட பெண்களே அதிகம். பதக்கம் பெறும் 69 பேரிலும் 39 பேர் பெண்கள். அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அறிவித்தவர் முதல்-அமைச்சர். உயர்கல்வியில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இத்திட்டம்.

தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர் நிச்சயம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

மாணவர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கையில் வளம் பல பெற்று நலமோடு வாழ, நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வேலை தேடுவோராக இன்றி, வேலை தருவோராக மாற வேண்டும் என்ற அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்