பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ்423 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான முதல் தவணைத்தொகைகலெக்டர் பழனி வழங்கினார்

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 423 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான முதல் தவணைத்தொகையை கலெக்டர் பழனி வழங்கினார்.

Update: 2023-02-19 18:45 GMT


விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான முதல் தவணைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி தலா ரூ.26,029 வீதம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 223 பயனாளிகளுக்கு ரூ.58 லட்சத்து 4 ஆயிரத்து 467, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 200 பயானாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 5 ஆயிரத்து 800 என மொத்தம் 423 பேருக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான முதல் தவணைத்தொகையை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், வீடுகள் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீடுகள் கட்டி பயனடையுமாறு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்