பிரதமர் மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை, அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை ? - செல்லூர் ராஜூ கேள்வி
எடப்பாடி பழனிசாமியின் அருமை, அண்ணாமலைக்கு தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.;
சென்னை,
எடப்பாடி பழனிசாமியின் அருமை, அண்ணாமலைக்கு தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
அண்ணாமலை பாஜக மாநில தலைவர் அவ்வளவுதான். எங்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா , ஜேபி நட்டா ஆகியோர் தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் பிரதமர் மோடி. அவருக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை? என செல்லூர் ராஜூ கூறினார்