பிரதமர் மோடிக்கு, சாலை எங்கும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

ஹெலிபேட் தளத்தில் இருந்து கார் மூலம் பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்கலைக்கழகத்துக்கு செல்லும் வழியில் பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான பாஜகவினர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Update: 2022-11-11 11:23 GMT

மதுரை,

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று திண்டுக்கல் வந்தார். மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்துக்கு வந்தார்.

முன்னதாக, ஹெலிபேட் தளத்தில் இருந்து கார் மூலம் பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்கலைக்கழகத்துக்கு செல்லும் வழியில் பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான பாஜகவினர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, காத்திருந்த பொதுமக்களை பார்த்தவுடன், காரில் இருந்து வெளியே வந்து கூடியிருந்த மக்களைப் பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்