தனுஷ்கோடி செல்கிறார் பிரதமர் மோடி
3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டுக்கு வருகிறார்.;
சென்னை,
தமிழ்நாட்டுக்கு 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறார். சென்னையில் 'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இதுதவிர அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேகத்திற்காக ஸ்ரீரங்கம், ராமேசுவரம் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து தீர்த்தங்களையும் பிரதமர் மோடி தனித்தனியாக சேகரிக்கிறார்.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம், ராமேசுவரத்தை தொடர்ந்து தனுஷ்கோடிக்கு பிரதமர் மோடி செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி செல்லும் அவர் அங்குள்ள கோதண்டராமர் சுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார். அதன்பின், அரிச்சல் முனை பகுதிக்கும் பிரதமர் மோடி செல்கிறார்.