நாமக்கல்லில் சுயநிதி மழலையர், தொடக்கப்பள்ளிகள் சங்க கூட்டம்
நாமக்கல்லில் சுயநிதி மழலையர், தொடக்கப்பள்ளிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.
சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனர் சுப்பய்யன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திருவின்மணாளன், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்டிட உறுதி சான்று, உரிமம் சான்று, தீ தடையின்மைச்சான்று, சுகாதாரச்சான்று ஆகிய 4 வகை சான்றுகள் இருந்தாலே போதுமானதாக கருதி கட்டிடம் பாகுபாடு பார்க்காமல், மற்றவகை சான்றுகளை கட்டாயப்படுத்தாமல் தொடர் அங்கீகாரம் நிலுவையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் புதுப்பித்து வழங்க வேண்டும்.
நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு டி.டி.சி.பி. அனுமதி கட்டாயப்படுத்தாமல், 3 கிரவுண்டு இடம் தேவை என்பதை தளர்த்தி, மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கும் இடத்தை எடுத்துகொண்டு, தொடர் அங்கீகாரம் புதுப்பித்து வழங்க வேண்டும். குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு அறக்கட்டளை நிதி ரூ.1 லட்சம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.