ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்;
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை சிவகங்கை பூங்கா வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் மகேந்திரன் மற்றும் நகரத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தஞ்சை ஊரக வட்டார செயலாளர் கார்த்திகேயன், ஒரத்தநாடு தலைவர் அருளானந்தஐயர், மாநிலதுணைதலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு உரிமை மற்றும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.