தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

மரக்காணத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-10 18:45 GMT

பிரம்மதேசம், 

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பணிகளை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வித்துறையின் நடவடிக்கையை கைவிடக்கோரி தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மரக்காணம் வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் துரைராஜ் தோமினிக்சாவியோ வரவேற்றார். இதில் மாவட்ட துணை தலைவர் தேவ் ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர் பக்தவத்சலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரேமலதா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் வட்டார துணை தலைவர்கள் ஸ்டாலின், ராமானுஜம், ஜெயந்தி, வட்டார துணை செயலாளர்கள் ஜெஸ்டின்ராஜ், மெட்டில்டா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கோபி, செந்தில்குமரன், செல்வி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்த கோஷங்களை எழுப்பினர். முடிவில் வட்டார பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்