தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்-ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்-ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்

Update: 2022-09-20 19:32 GMT

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி ஆகியவை சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்தவேண்டும். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பதவியினை மீண்டும் உருவாக்கி, தொடக்கக்கல்வி இயக்குனரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிராஜூதீன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மத்திய அரசு வழங்கும் அதே அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்கவேண்டும். பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக நடைமுறைபடுத்தவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்