தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
அரியலூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பி.எட். பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்து அவமதிப்பதை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஆசிரியர்கள் கூட்டணியின் வட்டார தலைவர் அருள்ஜோதி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் எழில் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். இதில் வட்டார பொருளாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.