தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-18 20:09 GMT

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். உண்ணாவிரத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது மற்றும் 7-வது மத்திய ஊதிய குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பதவியினை மீண்டும் உருவாக்கி, தொடக்கக்கல்வி இயக்குனரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் அருமை கண்ணு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திருச்சி மாவட்டம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்