ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பரூக் நினைவு ஆரம்பப் பள்ளியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-01-29 18:45 GMT

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பரூக் நினைவு ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சேவியர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் மாரிமுத்து வரவேற்றார்.

வருகிற 12-ந் தேதி நடைபெறவுள்ள ஜாக்டோ- ஜியோ ஆயத்த மாநாடு, மார்ச் 5-ல் நடைபெறவுள்ள ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம், மார்ச் 24-ல் நடைபெறவுள்ள வட்டார தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் போன்றவற்றில் அதிக அளவு உறுப்பினர்களை பங்கெடுக்க செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட கல்வி அலுவலகத்தில் தேங்கி உள்ள கோப்புகளின் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஆணை வழங்க வேண்டியும், இல்லையேல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மாடசாமி, துரைராஜ், கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் மாணிக்கம், சுதர்சன், தென்காசி ராஜ்குமார், சிவகுமார், மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், செல்வராஜ், ஜாஹிரா மற்றும் வட்டார பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்