தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-25 18:45 GMT

நம்பிபுரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தூத்துக்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தாக்குதலை கண்டித்து...

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள நம்பிபுரம் இந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், எதிர் காலத்தில் எந்தவொரு ஆசிரியருக்கும் இதுபோன்ற நிகழ்வு ஏற்படாத வகையில் தமிழ்நாடு அரசு, ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நேற்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு சார்பில் தூத்துக்குடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ்நிறுத்தம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் லெட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார்.

கலந்துகொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரும், ஏ.ஐ.பி.டி.எப். இணை பொதுசெயலாளருமான ரெங்கராஜன் சிறப்புரை ஆற்றினார். மாநில பொருளாளர் குமார் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்