ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்ப ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.
காவேரிப்பாக்கம்
தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.
காவேரிப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு ஆிரியர்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, இயக்க கொடியேற்று விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவேரிப்பாக்கம் வட்டார தலைவர் பாஸ்கரன் வரவேறறார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தாஸ் பேசுகையில், ''பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள ஈட்டிய விடுப்பு தொகையை உடனே வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.