ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
நெல்லையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பால்ராஜ் பேசினார். மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப்ரவரி 24-ந் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி நடைபெறும் பேரணியில் நெல்லை மாவட்டத்தின் சார்பில் 25 பேர் கலந்து கொள்வது, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் போராட்டங்களில் அதிக அளவில் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.