தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

தேக்கு மரங்களை வெட்டி கடத்திய விவகாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;

Update: 2023-10-18 18:16 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த 17 தேக்குமரங்களை 5-ந்தேதி யாரோ வெட்டி கடத்தி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் துரை ஆகியோர் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

மேலும் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆலங்காயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேக்கு மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.

மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் துரையை பணியிடை நீக்கம் செய்ய திருப்பத்தூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அமுதா உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் அவருடைய வீட்டிலும் ஒட்டப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்