தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-09-11 19:49 GMT

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் டவுனில் உள்ள மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக பி.எட் பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்ல அனுமதிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஜார்ஜ் இனிகோ, ராஜகுமார், வேல்முருகன், மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார். உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ராபர்ட் விசுவாசம், சரவணக்குமார், நம்பிராஜன், அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் பிரம்ம நாயகம், நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ், நிர்வாகிகள் மோதிலால் ராஜ், காந்தி ராஜா, அருள் கென்னடி ராஜ், உமையொரு பாகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஜான் பாரதிதாசன், பாலசுப்பிரமணியன் உட்பட ஆசிரிய ஆசிரியர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்