குருபெயர்ச்சி விழா
லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்டிச்சோலையில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 9 கலசங்கள் வைத்து அர்ச்சகர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் சிறப்பு ஹோம பூஜைகள் நடத்தினர். அப்போது விநாயகர் வழிபாடு, புண்யாஹம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், குருபெயர்ச்சி சிறப்பு ஹோமம், பூர்ணாகுதி நடத்தப்பட்டது. பின்னர் பூஜிக்கப்பட்ட கலசங்களில் வைக்கப்பட்டு இருந்த புனிதநீர் மூலம் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, குருபகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குருபகவானை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலிலும் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.