விபத்தில் காயம் அடைந்த பூசாரி சாவு

விபத்தில் காயம் அடைந்த பூசாரி உயிரிழந்தார்.;

Update: 2023-07-26 18:36 GMT

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பாதிரிப்பட்டியை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 47). பூசாரியான இவர் கடந்த 22-ந்தேதி குளித்தலை-மணப்பாறை சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த அண்ணாதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்