நிலத்தகராறில் முன் விரோதம்: நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
நிலத்தகராறில் முன் விரோதம் காரணமாக நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி பாலக்கரை பீமநகரை சேர்ந்தவர் தேன்மொழி (வயது 37). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் இவருடைய உறவினர்கள் ராஜசேகர் (37), ராம்குமார் (34) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு தேன்மொழியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இருவரும் தேன்மொழியுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது, தேன்மொழியை அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, தலை முடியை பிடித்து இழுத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேன்மொழி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர், ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.