அச்சக அதிபர் தற்கொலை

அச்சக அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-04 21:32 GMT

சிவகாசி

சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56). இவர் சாமிபுரம் காலனியில் அச்சகம் நடத்தி வந்தார். இவரது மகள் மகாலட்சுமிக்கு திருமண ஏற்பாடு செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மனஅழுத்தத்துடன் காணப்பட்டு வந்த செல்வராஜ் அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து அச்சகத்துக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி செல்வி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது செல்வராஜ் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த செல்வி தனது மகன் சிவக்குமாருடன் சாமிபுரம் காலனியில் உள்ள அச்சகத்துக்கு நேரில் வந்து பார்த்தபோது குடோன் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதை தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு செல்வராஜ் தூக்கில் இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், மகன் இருவரும் போலீஸ் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்