தமிழகத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை
வரும் 18ம் தேதி தமிழ்நாட்டிற்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.;
சென்னை,
ஜனாதிபதியின் தமிழக பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார். வரும் 18ம் தேதி தமிழ்நாட்டிற்கு வரும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
இந்தநிலையில் அவரது வருகையை யொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.