வாக்குச்சாவடி முகவர் பட்டியலை தயார் செய்து அனுப்புங்கள்: மாவட்ட செயலாளர்களுக்கு தி.மு.க. அறிவுறுத்தல்

வரும் 10-ந் தேதிக்குள் வாக்குச்சாவடி முகவர் பட்டியலை தயார் செய்து அனுப்புங்கள்: மாவட்ட செயலாளர்களுக்கு தி.மு.க. அறிவுறுத்தல்.

Update: 2022-11-01 18:37 GMT

சென்னை,

தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த மாதம் அக்டோபர் 9-ந் தேதி அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பூத் கமிட்டி அமைத்திட வேண்டும் என்று அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்ட செயலாளரும், தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அதனை வரும் 10-ந் தேதிக்குள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.

மாவட்ட செயலாளர்கள், தத்தமது மாவட்டத்தில் உள்ள மாநகர ஒன்றியநகர பகுதி - பேரூர் செயலாளர்களிடம் இப்பணியை ஒப்படைத்து, அவர்களிடமிருந்து பெறப்பட்ட பட்டியலை தொகுத்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் வாக்குச்சாவடி முகவர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்