ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு

ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு அடுத்த மாதம் 5-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-02-20 11:16 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு திருவள்ளூரில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில துணை தலைவர் ஏ.மணிகண்டன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மெல்கிராஜாசிங், ஷேக் கபூர், ராஜாஜி, முத்துக்குமார், கணேசன், லோகையா மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த மாநாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியினை மத்திய அரசு அறிவிக்கும் அதே தேதியில் நிலுவை தொகையுடன் வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவிகிதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

3,500 அரசு தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3,500 சத்துணவு மையங்களை மூடுவதையும் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் மார்ச் 5-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும், ஏப்ரல் 24-ந் தேதி மனித சங்கிலி போராட்டமும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்