முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும் வருகிற 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை வருகை தருகிறார்.
இதையொட்டி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விழா பந்தல் அமைக்கும் பணி நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி விழாவினை சிறப்பான முறையில் நடத்த வேண்டும்'' என்றார்.
கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ''எல்ேலாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி செய்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சியில் அதிகப்படியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மேலும் விழாவை அனைத்து தரப்பினரும் பெருமை கொள்ளும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்'' என்றார். கூட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி வனத்துறையின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை அமைச்சர்கள் நட்டனர்.