அரியலூரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முதற்கட்ட சரிபார்க்கும் பணிகள்-கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தல் ஆயத்தமாக அரியலூரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முதற்கட்ட சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது. இதனை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-15 18:30 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, அரியலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஆயத்த பணிக்காக சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்களை முதற்கட்ட சரிபார்க்கும் பணியான துகடந்த 4-ந்தேதி முதல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், உரிய பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது, அரியலூர் மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட்ட 1,440 வாக்குப்பதிவு எந்திரங்கள், 859 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 926 வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்களை சரிபார்க்கும் பணியினை, பெங்களூரு பாரத் மின்னணு லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பணியினை நேற்று மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் தேர்தல் ஆணைய வாக்குப்பதிவு எந்திர கண்காணிப்பு அலுவலர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று வரை 914 வாக்குப்பதிவு எந்திரங்கள், 832 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 812 வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் 19 வாக்குப்பதிவு எந்திரங்கள், 139 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 42 வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் இயங்கா நிலையில் தனியாக கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் (தேர்தல்) வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்