கர்ப்பிணிபெண், தாயாரை தாக்கி கொலை மிரட்டல்

கழுகுமலை அருகே கர்ப்பிணிபெண், தாயாரை தாக்கி கொலை மிரட்டல்விடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-27 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை அருகே வீடு முன்பு பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த 4 வாலிபர்கள், கர்ப்பிணிபெண் மற்றும் அவரது தாயாரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இதில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பட்டாசு வெடித்ததால் பிரச்சினை

கழுகுமலை அருகே உள்ள துலுக்கர்பட்டி சிவகாமி நகர் காலணி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். கூலி தொழிலாளியான இவரது மனைவி மகாலட்சுமி (வயது 19). தற்போது இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது மகாலட்சுமி வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த மகன்கள் விஜி ( 28), ராஜா (30), அமல்ராஜ் மகன் ஸ்ரீதர் ( 21), செல்வம் மகன் தினேஷ் ( 28) ஆகியோர் பட்டாசு வெடித்துள்ளனர். இதனை மகாலட்சுமியும், அவரது தாயாரும் கண்டித்துள்ளனர்.

கொலை மிரட்டல்

இதை தொடர்ந்து அமுதாவிற்கும் அந்த 4 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் அமுதாவை தாக்கியதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்து தடுக்க வந்த அமுதாவின் மகள் மகாலட்சுமியையும் கீழே பிடித்து தள்ளி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த தாய், மகள் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

3 வாலிபர்கள் சிக்கினர்

இது குறித்த புகாரின்பேரில் கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து ராஜா, ஸ்ரீதர், தினேஷ் ஆகியோரை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள விஜி என்பவரை போலீசார் வலை வீசிதேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்