எலிமருந்து சாப்பிட்டு கர்ப்பிணி தற்கொலை

எலிமருந்து சாப்பிட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-19 18:30 GMT

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி சந்தோஷம் (வயது 24). இவர்களுக்கு ஏற்கனவே ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சந்தோஷம் 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இன்னொரு குழந்தை வேண்டாம் என அவர் நினைத்துள்ளார். ஆனால் டாக்டர்கள் கருவை கலைக்க வேண்டாம் என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் சம்பவத்தன்று எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று சந்தோஷம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்