முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை

முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை நடத்தப்பட்டது.;

Update: 2023-09-21 17:51 GMT

பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை, செயல் விளக்கம் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி முன்னிலை வகித்தார். மாணவ-மாணவிகள் முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட அலுவலர் அம்பிகா தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பருவமழை காலங்கள், தீ விபத்து, சாலை விபத்து போன்ற பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் செயல் விளக்கத்தை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்