சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

Update: 2022-09-01 20:51 GMT

திருச்சி,

திருச்சியில் நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதனை வெளியேற்றுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையை வெள்ளம் பாதிக்காத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது. ரூ.935 கோடியில் அனைத்து இடங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன. வடிகால் பணிகள் மேற்கொள்ளும் பகுதியில் மின்சார கேபிள்கள், தொலைபேசி கேபிள்கள், பாதாள சாக்கடை குழாய்கள், மெட்ரோ குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளதாலும், மின்கம்பங்களும், மரங்களும் இருப்பதாலும் குறித்த காலத்துக்குள் பணிகளை பூர்த்தி செய்ய முடியவில்லை.

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்துவிட்டு தான் வடிகால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கிடையே போக்குவரத்துக்கு சங்கடங்கள் ஏற்படும் என்பதால் சில இடங்களில் சாலையை துண்டிக்க முடியாத நிலை இருக்கிறது. இருப்பினும் முதல்-அமைச்சரும், நானும் பணிகளை வேகப்படுத்தும்படி ஒப்பந்ததாரர்களிடம் கூறி இருக்கிறோம். இப்போது பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அது மட்டுமல்லாமல் இணைப்புகள் வழங்கப்படாத பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மோட்டார் உள்ளிட்ட வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. எனவே கடந்த முறை அதிகமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்த முறை வெள்ள பாதிப்பு அதிகம் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்